படுவான்கரைப் பகுதியில் இளம் தமிழ் பெண் ஒருவரை படையினர் மிலேச்சத்தனமாக படுகொலை செய்துள்ளதாக பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, அரசாங்கம் இப்படுகொலை சம்பந்தமாகப் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது. பாலசுப்பிரமணியம் தவமணி (வயது-27) என்பவரே கடந்த 07 ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் அவருடைய வீட்டுக்கு இராணுவ சீருடையில் வந்த விசேட அதிரடிப் படையினரால் படுகொலை செய்யப்பட்டதாகவும் தவமணியை பெயர் சொல்லி அதட்டிக் கூப்பிட்டவாறு வீட்டுக்கு வந்த அதிரடிப்படையினர் தவமணியை பலாத்காரமாக வெளியே அழைத்து சென்று தவமணியின் தாயாரின் முன்னிலையில் தவமணியை 12 தடவைகள் கூரிய ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்தனர் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் தவமணியின் தாயாரை படையினர் மிரட்டிச் சென்றுள்ளனர் என குறிப்பிடப்படுகிறது.
தொடர்ச்சி...
Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen