பெண்கள் முன்னணி நடத்தும்
பெண்கள் கலைவிழா
ஆளுமையின் ஒரு வடிவம்
பெண்களைப் பிளவுபடுத்தும் சமூகப் போக்கிற்குச் சவாலாக, உழைக்கும் பெண்களை ஒன்றிணைக்கும் ஒப்பற்ற கலைவிழா
வாரீர் !
கண்ணீர் இனி இல்லை! வலியே நமது வலிமை!
21 செப்ரம்பர் மதுரை தமுக்கம் மைதானத்தில் மாலை 5 மணிமுதல் விடியல் 5 மணி வரை நடைபெறவுள்ளது.
மேலும்
Dienstag, 18. September 2007
Samstag, 21. Juli 2007
வானம் ஏன் மேலே போனது -பஹீமாஜஹான் (இலங்கை)
விஜயலட்சுமி சேகரின் “வானம் ஏன் மேலே போனது” இன்னுமொரு பெண் மொழி சார்ந்த பிரதியாக வெளி வந்துள்ளது.
இத்தொகுதியில் உள்ள சில பிரதிகள் சிறுகதை என்ற வழமையான சட்டகத்துள் வைக்க முடியாதனவாகவும் மரபுகளைவிட்டுத் தம்மை விடுவித்துக் கொண்டும் எழுதப்பட்டுள்ளன.ஆணாதிக்கக் கூறுகளில் இருந்து விடுபட்டுப் பெண் தனக்கான மொழியையும் வெளியையும் கண்டடைய வேண்டும் என்ற கூற்று வலுப்பெற்றுவரும் சூழ்நிலையில் அத்தகைய முயற்சியின் ஒரு பிரதிபலிப்பாக இவருடைய சில பிரதிகள் அமைந்துள்ளன.
தொடர்ச்சி...
இத்தொகுதியில் உள்ள சில பிரதிகள் சிறுகதை என்ற வழமையான சட்டகத்துள் வைக்க முடியாதனவாகவும் மரபுகளைவிட்டுத் தம்மை விடுவித்துக் கொண்டும் எழுதப்பட்டுள்ளன.ஆணாதிக்கக் கூறுகளில் இருந்து விடுபட்டுப் பெண் தனக்கான மொழியையும் வெளியையும் கண்டடைய வேண்டும் என்ற கூற்று வலுப்பெற்றுவரும் சூழ்நிலையில் அத்தகைய முயற்சியின் ஒரு பிரதிபலிப்பாக இவருடைய சில பிரதிகள் அமைந்துள்ளன.
தொடர்ச்சி...
Dienstag, 17. Juli 2007
மரணத்தின் வாசலில் நிற்கும் இளம்பெண்
இலங்கையின் மூதூர்ப்பகுதியைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் பெண் தனது பாதுகாப்பில் இருந்த நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்பார்க்கும் பரிதாப நிலைக்கு...
தொடர்ச்சி...
தொடர்ச்சி...
17 வருடங்களாக இடம்பெயர்ந்தவர்களின் அவலம்....?
இலங்கையில் இன்றைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் இராணுவத்தீர்வு அணுகுமுறையால் பல்லாயிரக்கணக்கானவர்கள் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் சொந்தமண்ணிலேயே அகதிகளாக அல்லலுற்று வாழ்ந்து வருகின்றார்கள். பல தமிழ் மக்கள் உயிரிழந்துள்ளனர்; காணாமல் போயுள்ளனர், கடததப் பட்டு கொலை செய்துள்ளனர்...
தொடர்ச்சி...
தொடர்ச்சி...
மட்டக்களப்பில் இளம் பெண் படையினரால் படுகொலை
படுவான்கரைப் பகுதியில் இளம் தமிழ் பெண் ஒருவரை படையினர் மிலேச்சத்தனமாக படுகொலை செய்துள்ளதாக பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, அரசாங்கம் இப்படுகொலை சம்பந்தமாகப் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது. பாலசுப்பிரமணியம் தவமணி (வயது-27) என்பவரே கடந்த 07 ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் அவருடைய வீட்டுக்கு இராணுவ சீருடையில் வந்த விசேட அதிரடிப் படையினரால் படுகொலை செய்யப்பட்டதாகவும் தவமணியை பெயர் சொல்லி அதட்டிக் கூப்பிட்டவாறு வீட்டுக்கு வந்த அதிரடிப்படையினர் தவமணியை பலாத்காரமாக வெளியே அழைத்து சென்று தவமணியின் தாயாரின் முன்னிலையில் தவமணியை 12 தடவைகள் கூரிய ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்தனர் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் தவமணியின் தாயாரை படையினர் மிரட்டிச் சென்றுள்ளனர் என குறிப்பிடப்படுகிறது.
தொடர்ச்சி...
தொடர்ச்சி...
Abonnieren
Posts (Atom)